கிளிநொச்சி பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவனுக்குக் கொரோனா!

Report Print Rakesh in சமூகம்
196Shares

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட மாணவன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவில் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் 7 நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து அறிவியல் நகர் திரும்பியிருந்தார் என்று கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.சரவணபவன் தெரிவித்தார்.

தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவனைக் கிளிநொச்சியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் மேலும் கூறினார்.