மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் கொவிட் பரிசோதனை

Report Print Kamel Kamel in சமூகம்
115Shares

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பெப்ரவரி மாதம் 1ம் திகதி வரை இவ்வாறு பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.

ரெபிட் அன்டிஜன் பரிசோதனை இவ்வாறு நடாத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாணத்தின் பதினொரு வெளியேறும் பிரதான வழிகளில் இந்த பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.

நீண்ட வார இறுதி விடுமுறையில் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்திலிருந்து கொவிட் தொற்றாளிகள் வெளியேறுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பரிசோதனை நடாத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.