கொவிட் தடுப்பூசி உற்பத்தி குறித்து உள்நாட்டிலிருந்து முன்மொழிவுகள்

Report Print Kamel Kamel in சமூகம்
54Shares

கொவிட் தடுப்பூசி உற்பத்தி தொடர்பில் உள்நாட்டிலிருந்து முன்மொழிவுகள் செய்யப்படுவதாக தொற்று நோய் மற்றும் கொவிட் தடுப்பு ராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தடுப்பூசி ஏற்றுவது குறித்த திட்டத்திற்கான அனைத்து ஆரம்ப கட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவப் படைவீரர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சுகாதார சேவையில் சுமார் 155000 பணியாளர்கள் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி ஏற்றும் போது ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்களை கண்டறியும் நோக்கில் கடந்த வாரம் ஒத்திகை ஒன்று முன்னெடுக்கப்டப்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து கொவிஷீல்ட் தடுப்பூசிகள் 500,000 கிடைக்கப் பெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டு மூன்று வாரங்களின் பின்னர் இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.