யாழில் வைத்தியர், தாதியர்கள் 7 பேர் கட்டாய சுயதனிமையில்! சத்தியமூர்த்தி தெரிவிப்பு

Report Print Rakesh in சமூகம்
206Shares

யாழ். போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாளர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர், தாதியர்கள் என 07 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 21ஆம் திகதி கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்பட்ட நபருக்குக் கொரோனாத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த நபர் சிகிச்சைக்காகக் கடந்த 23ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டிருந்தார். அவருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தெரியவந்தது.

இதனால் அவருக்குச் சிகிச்சை வழங்கிய வைத்தியர், தாதியர்கள் என 07 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.