நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு!

Report Print Murali Murali in சமூகம்
55Shares

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை காலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்த விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் ஒன்பது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

அந்த வகையில், 659 இ - போகாவத்த கிராம சேவகர் பிரிவு, 659 சி - பமுனுமுல்ல கிராம சேவகர் பிரிவு, 657 ஏ - கொலமெதிரிய கிராம சேவகர் பிரிவு, 659 பி - கொரவெல கிராம சேவகர் பிரிவு, 660 - பமுனுமுல்ல கிராம சேவகர் பிரிவு, 659 - அட்டுலுகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு, 659 ஏ - அட்டுலுகம மேற்கு கிராம சேவகர் பிரிவு, 660 ஏ - எபிடமுல்ல கிராம சேவகர் பிரிவு மற்றும் 659 டி - கல்கேமண்டிய கிராம கிராம சேவகர் பிரிவுகள் நாளை காலை தனிமைப்படுத்தல் நிலையில் இருந்த விடுவிக்கப்படுவதாக

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள எஹெலியகோடா பிரதேச செயலக பிரிவில் உள்ள மொராகலா கிராம சேவகர் பிரிவில் அமுல்படுத்தப்பட்ட தனிமை நிலையும் நாளை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.