வவுனியா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனாத் தொற்று!

Report Print Rakesh in சமூகம்
34Shares

வவுனியா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் மேலும் 16 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஒருவருக்கு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்ட ஏனையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் இன்று புதன்கிழமை வெளியாகியிருந்தன.

இதனடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு நாளை வியாழக்கிழமை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.