திருமணமாகி ஒரு மாதம் முடிந்ததும் 26 வயது பெண்ணொருவர் சடலமாக மீட்பு

Report Print Sujitha Sri in சமூகம்
740Shares

திருமணமாகி ஒரு மாதமேயான நிலையில் 26 வயது இளம் குடும்பப் பெண்ணொருவர் மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செட்டிபாளயம் பிரதேசத்தை சேர்ந்த செனஸ்சங்கரி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பெண் நேற்று இரவு வீட்டின் முன்னாள் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.