நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
75Shares

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் கடும் காயங்களுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்றைய தினம் மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பேருந்தொன்று, பவுஸருடன் மோதி இழுத்துச் செல்லப்பட்டு மண்மேட்டில் மோதி குடை சாய்ந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மொனராகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடு ஒன்றுக்காக சென்றவர்களே இதன்போது பேருந்தில் இருந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பேருந்தில் 18 பேர் பயணித்துள்ளதுடன், இதில் 13 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.