யாழ்.போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவருக்கு கோவிட் வைரஸ் தொற்று

Report Print Rakesh in சமூகம்
107Shares

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் அடையாளம் காணப்பட்ட ஐவரில் வைத்திய நிபுணரும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ஒருவருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொண்டை நோ, தலையிடி போன்ற அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அவர் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்பட்ட நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணராகிய அவருடைய குடும்பத்தார் கொழும்பில் வசிக்கின்றனர்.

இந்தநிலையில், குறிப்பிட்ட வைத்திய நிபுணர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.