வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு நகரசபையினரினால் தடை

Report Print Thileepan Thileepan in சமூகம்
29Shares

வவுனியா நகரப்பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு வவுனியா நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தாக்கத்தை கருத்திற்கொண்டு வவுனியா நகரசபையினரினால் இந்த நடவடிக்கை இன்று (22.02) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரப்பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்ட நிலையில், நகரசபையின் தடையுத்தரவினை மீறி வீதியோர நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நகரசபையினர் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது வீதியோரத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர்களின் மரக்கறிகள், பொருட்களை நகரசபையினர் ஏற்றிச்சென்றதுடன் ,அவர்களுக்கு தண்டப்பணமும் விதித்தனர்.

நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சிலர் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நகரசபை வாகனத்தின் மீது மரக்கறிகளை எறிந்து எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.