கிளிநொச்சி - பூநகரி மத்திய கல்லூரியின் மற்றுமொரு ஆசிரியைக்கும் கோவிட்

Report Print Rakesh in சமூகம்
93Shares

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி மத்திய கல்லூரியில் கற்பிக்கும் மற்றுமொரு ஆசிரியைக்கும் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனிடையே பூநகரி மத்திய கல்லூரியில் கற்பிக்கும் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடந்த வாரம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று அடையாளம் காணப்பட்ட ஆசிரியை அவருடன் நெருங்கிப் பழகியவர் என்று தெரியவந்துள்ளது.

இதனிடையே இன்று தொற்றுக்குள்ளான ஆசிரியை பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் என்று அறியமுடிந்தது.

ஏற்கனவே வலைப்பாடு கிராமத்தைச் சேர்ந்த பலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.