மகனைத் தேடிய தாய் மரணம்

Report Print Theesan in சமூகம்
104Shares

வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா - மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இவரது மகன் தருமகுலநாதன் கடந்த 2000ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவரைத்தேடி வவுனியாவில் 1465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனைக் கண்டுபிடித்து தருமாறு கோரி போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனைக் காணாமலேயே அவர் நேற்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.