வவுனியா - கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் மற்றும் பெரியார்களின் பெயர்கள் வைக்கும் திட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
20Shares

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருக்காரம் பளை கிராம சேவையாளர் பிரிவு கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள், தமிழ் பெரியார்களின் பெயரை வைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மருக்காரம்பளை கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரனின் எண்ணக்கருவில் கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்குப் புதிதாக தமிழ் மன்னர்கள், தமிழ் பெரியார்களின் பெயர்களை வைக்கும் திட்டம் தொடர்பில் பொதுமக்கள், பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு கணேசபுரம் முதலாம் ஒழுங்கை தொடக்கம் 12ஆம் ஒழுங்கை வரை அமைக்கப்பட்ட வீதிகள் அவற்றின் ஒழுங்கைகளுக்குத் தமிழ் மன்னர்கள், தமிழ் பெரியார்கள் என பல்வேறு பெயர்கள் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து இப்பெயர்களை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் அனுமதியுடனும் பிரதேச செயலக ஒத்துழைப்புடனும் சட்டரீதியாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இவ்வீதிகளுக்கு இப்பெயர் பலகைகளை நிர்மாணிக்கவும் மக்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கணேசபுரம் முதலாம் ஒழுங்கை (இடது):- இளங்கோ வீதி, முதலாம் ஒழுங்கை (வலது) :-சுப்பிரமணியம் வீதி , 2ம் ஒழுங்கை:- புனித சின்னப்பர் வீதி, 2ம் ஒழுங்கை 1ம் குறுக்கு தெரு :- நாச்சியார் வீதி , 2ம் ஒழுங்கை 2ம் குறுக்கு தெரு :- கபிலர் வீதி , 3ம் ஒழுங்கை:- அகத்தியர் வீதி , 4ம் ஒழுங்கை:-விவேகானந்தர் வீதி , 4ம் ஒழுங்கையின் 1ம் குறுக்கு தெரு :- மாருதி வீதி ,4ம் ஒழுங்கையின் 2ம் குருக்கு தெரு :- கரிகாலன் வீதி , 5ம் ஒழுங்கை :- கம்பர் வீதி , 6ம் ஒழுங்கை : கருமாரி அம்மன் கோவில் வீதி , 7ம் ஒழுங்கை :- தனிநாயகம் வீதி , 8ம் ஒழுங்கை :- எல்லாளன் வீதி , 8ம் ஒழுங்கையின் 1ம் குறுக்கு தெரு :-அருணாசலம் வீதி , 9ம் ஒழுங்கை :- பாண்டியன் வீதி , 10 ம் ஒழுங்கை :-சேக்கிழார் வீதி , 11ம் ஒழுங்கை :- பாரதி வீதி , புதிய வீட்டுத்திட்ட ஒழுங்கை:- விபுலானந்தர் வீதி , 40 வீட்டுத்திட்ட வீதி :- சேரன் சுற்றுவட்ட வீதி , சேவலங்கா வீதி :- காந்தி வீதி எனவும் மாற்றம் பெற்றுள்ளது.