சலூன்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இலங்கையரின் புதிய முயற்சி

Report Print Vethu Vethu in சமூகம்
240Shares

புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அழகு கலை நடவடிக்கை, தலை முடி வெட்டுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான மேல் ஆடை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்த கூடிய வகையில் இந்த ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது

சமகாலத்தில் அழகு கலை நிலையங்கள் மற்றும் சலூன்கள் போன்ற இடங்களில் ஒரே போர்வை பல வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தும் நடைமுறை உள்ளது. இதன் காரணமாக மக்களின் உடலில் கோவிட் வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. இதிலிருந்து பாதுகாப்பு பெற இந்த தயாரிப்பு உதவும் என குறிப்பிடப்படுகின்றது.

புலத்கொஹுபிட்டிய - நெவ்ஸ்மியர் பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான எம்.ஏ.சமீம் பெரேராவினால் இதனை புதிய கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்து.

இதனை தயாரிப்பதற்காக பேப்பர் ஸ்டிக், துணி துண்டு, கிருமி நீக்கி மற்றும் கார்ட்போட் அட்டை என்பன பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு மேற்போர்வையை 30 ரூபா என்ற விலையில் வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அதனை 50 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.