விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் உள்ளிட்டோரின் படங்களை தொலைபேசியில் வைத்திருந்தவர் கைது

Report Print Yathu in சமூகம்
163Shares

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் உள்ளிட்டவர்களின் படங்களை தொலைபேசியில் வைத்திருந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி - திருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த குறித்த நபரின் தொலைபேசியை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த தொலைபேசியில் விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட அமைப்பின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதான சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்ற வருவதாகவும் கிளிநொச்சி பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.