கண்டி பொலிஸார் நேற்றைய தினம் 47 வயதான பெண்ணொருவரை கைது செய்துள்ளனர்.
கண்டி தேசிய வைத்தியசாலையின் பெண் மருத்துவர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது பெயரில் வைத்திய பதிவு பத்திரம் ஒன்றை தயாரித்து இந்த பெண் தன்னை மருத்துவராக காட்டிக்கொண்டு மருந்தகம் ஒன்றை நடத்தி வருவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பெண் மருத்துவர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் சந்தேகநபரான குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.