மேம்படுத்தப்பட்ட நேர் நிகர் வகுப்பறையை ஆரம்பித்து வைத்த இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர்

Report Print Theesan in சமூகம்
74Shares

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலத்தில் மேம்படுத்தப்பட்ட நேர் நிகர் வகுப்பறை ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளார்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் அமைப்பினால் 21000 அமெரிக்க டொலர் மதிப்பில் வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயம் மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ள பாடசாலை என்பவற்றில் குறித்த நேர் நிகர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே பூந்தோட்டம் மகா வித்தியாலத்தில் மேம்படுத்தப்பட்ட நேர் நிகர் வகுப்பறை உத்தியோகப்பூர்வமாக இன்றையதினம் அமெரிக்க தூதுவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், பாடசாலையின் அதிபர் நந்தபாலன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.