தற்கொலை தாக்குதல் நடத்த உறுதிமொழி வழங்கியமை சம்பந்தமான குற்றச்சாட்டை எதிர்நோக்கும் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் முக்கிய உறுப்பினர் எனக் கூறப்படும் இப்ராஹிம் ஷாஹிடா என்ற யுவதியிடம் நடத்திய விசாரணைகளில் வெளியான தகவல்களுக்கு அமைய அந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் சில முக்கிய உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. .
இப்ராஹித் ஷாஹிடா என்ற யுவதி தடுப்பு காவல் உத்தரவின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விசாரணைகளில் தவ்ஹித் ஜமாத் பயங்கரவாத அமைப்பு தொடர்பாக மாத்திரமல்லாது மேலும் பல செயற்பாட்டு ரீதியான உறுப்பினர்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்ராஹிம் ஷாஹிடாவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் வழங்கும் உத்தரவுக்கு அமையத் தற்கொலை தாக்குதல் நடத்தத் தான் உட்பட 15 முஸ்லிம் பெண்கள் உறுதிமொழி வழங்கி இருந்தாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.