கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர்

Report Print Steephen Steephen in சமூகம்
121Shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளைச் செலுத்திக் கொண்டதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரமபுக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்காலத்தில் கோவிட்-19 இரண்டாவது தடுப்பூசி மருந்தைச் செலுத்திக்கொள்ள உள்ளனர்.