கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றம்

Report Print Sujitha Sri in சமூகம்
475Shares

கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சுகாதாரத்துறை சார்ந்த 11 கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதாரப் பிரிவு பணியாளர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சந்தர்ப்பத்திலேயே அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சுகாதாரத்துறை பணியார்களின் போராட்டம் காரணமாக, கொழும்பு நகர மண்டப பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.