2755 கிலோகிராம் கழிவு தேயிலைத்தூளை கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினர்

Report Print Thirumal Thirumal in சமூகம்
38Shares

பூண்டுலோயா பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றச் செல்லப்பட்ட 2755 கிலோகிராம் கழிவு தேயிலைத்தூளை தலவாக்கலை, விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அக்கரபத்தனை, போபத்தலாவ பகுதியிலிருந்து குறித்த கழிவு தேயிலைத்தூள் கம்பளைக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாகவும், பூண்டுலோயாவில் உள்ள தொழிற்சாலையொன்றில் வைக்கப்பட்ட பின்னர் கம்பளைக்கு கடத்தவே திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.

இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலைத்தூளும் பூண்டுலோயா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.