மட்டக்களப்பில் 21 வயது யுவதியை வெள்ளை வானில் கடத்தி சென்ற குழு

Report Print Saravanan in சமூகம்
819Shares

மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்த 21 வயது யுவதியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை வானில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினரே யுவதியின் வீட்டை இன்று அதிகாலை உடைத்து தாக்குதல் நடத்திவிட்டு நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் குறித்த குழு வீட்டின் வாசல்கதவை உடைத்து உள்நுழைந்த போது வீட்டின் உரிமையாளர் அவர்களை பொல்லால் தாக்கியபோதும் அவர்கள் அவரை திருப்பி தாக்கிவிட்டே நித்திரையில் இருந்த 21 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரசு சார்பு கட்சி ஒன்றில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரது குழுவே இந்த விடயத்தை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.