கடவுச்சீட்டை தொலைத்ததனால் கிரிக்கட் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள முடியாத இலங்கை அணியின் தலைவர்

Report Print Kamel Kamel in சமூகம்
156Shares

கடவுச்சீட்டை தொலைத்த காரணத்தினால், இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்கவிற்கு, மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிக்கட் சுற்றுப் பயணத்தில் இணைந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை டுவன்ரி-20 அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுச்சீட்டு தொலைந்த காரணத்தினால் சானக்கவிற்கு மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிக்கட் சுற்றுப் பயணத்தில் இணைந்து கொள்ளும் ஏனைய வீரர்களுடன் நேற்றைய தினம் பயணிக்க முடியாத நிலைமை உருவாகியது.

தசுன் சானக்கவின் கடவுச்சீட்டு மற்றும் வீசா பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடவுச்சீட்டு கிடைக்கப் பெற்றதன் பின்னர் தசுன் சானக்க மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிக்கட் சுற்றுப் பயணத்தில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.