ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள சில உணர்வுபூர்வமாக தகவல்களை சமூகத்திற்கு வெளியிட முடியாது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில அரசியல்வாதிகளுக்கு எதிராக அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் வெளியானால், அவர்கள்அதிலில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு தந்திரங்களை பயன்படுத்துவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இந்த தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளுக்கு எந்த தளர்வுகளும் வழங்காமல் சட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.