மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல்

Report Print Kumar in சமூகம்
51Shares

மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதான கணக்காளர் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாநகரசபையின் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

திருமண நிகழ்வொன்றில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதில் பங்குகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் மாநகரசபையின் பிரதான கணக்காளர் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபை மக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் 93 ஊழியர்கள், உத்தியோகஸ்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ள பொலிஸார் அது தொடர்பான சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.