தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 18 பேர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
12Shares

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபரணை லக்சிறிகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி விருந்து ஒன்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் 18 பேரும் 2500 ரூபா அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை கொரோனா விதிகளை மீறியமைக்காக 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.