நாளை ஆரம்பமாகவுள்ள யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா!

Report Print Rakesh in சமூகம்
61Shares

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35வது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை புதன்கிழமையும், நாளை மறுதினம் வியாழக்கிழமையும் இடம்பெறவுள்ளது.

இரண்டு நாள்களிலும், ஆறு அமர்வுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப்படிப்புகள், உள்வாரி, வெளிவாரி என 2 ஆயிரத்து 608 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கவுள்ளார்.

முதலாம் நாளான நாளை ஆயிரத்து 388 பேருக்குப் பட்டங்களும், டிப்ளோமாக்களும் வழங்கப்படவுள்ளன. இரண்டாம் நாளான நாளைமறுதினம் ஆயிரத்து 220 பேருக்குப் பட்டங்களும், டிப்ளோமாக்களும் வழங்கப்படவுள்ளன.