மரண வீடொன்றில் வைத்து இரு குழுக்களுக்கிடையில் மோதல் - ஆறு பேர் காயம்

Report Print Theesan in சமூகம்
1206Shares

வவுனியாவில் மரண வீடொன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் சிதம்பரபுரம், மதுராநகர் பகுதியில் இன்று அதிகாலை பதிவாகியுள்ளது.

ஆச்சிபுரம் மற்றும் மதுரா நகரை சேர்ந்த இரு குழுக்களே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் பின்னர் குழுக்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது.

சம்பவம் தொடர்பாக சிதம்பரபுர பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.