ஹட்டனில் பாடசாலை அதிபர் மீது பெற்றோர் தாக்குதல்

Report Print Steephen Steephen in சமூகம்
130Shares

ஹட்டன் வலய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு இரவு 8.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பாடசாலை அதிபர் பொகவந்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தனது பாடசாலையில் 10 ஆம் ஆண்டில் பயிலும் மாணவன் ஒழுக்கத்தை மீறியதற்காக அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாணவர்கள் சிலர் மற்றும் அவர்களது பெற்றோர் தன்னை தாக்கியதாக அதிபர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரண்டு தரப்பினரும் இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.