சுழற்சி முறையில் நள்ளிரவு தாண்டியும் தொடரும் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம்

Report Print Dias Dias in சமூகம்
192Shares

வடக்கு,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டமானது தற்பொழுது நள்ளிரவு தாண்டியும் சுழற்சி முறையில் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

பல அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் இளையோர் அமைப்புகள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பலரும் வந்து மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தொடர்ச்சியாக மக்கள் ஆதரவோடு அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் ஆதரவுடன் போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

எனவே அன்பார்ந்த தமிழ் உணர்வாளர்களே எமது உரிமைப்போராட்டத்திற்கு வலு சேர்ப்போம் வாரீர் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பதப்படுத்த வலியுறுத்தி போராட்டத்தை தொடர்வோம் என பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.