கனடாவில் இருந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடி அம்பலம் - சிக்கிய பிரபல வர்த்தகர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்
2761Shares

இலங்கை மக்களை பேஸ்புக் ஊடாக ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் கும்பலுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரிய போதைப் பொருள் விற்பனை மற்றும் லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு கிடைத்துள்ளதாக கூறி இளைஞர்களை ஏமாற்றி பேஸ்புக் ஊடாக பணம் கொள்ளையடித்து வந்த கோடீஸ்வர வர்த்தகர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஹெவ்லொக் டவுனில் சொகுசு வீட்டு தொகுதியின் 10வது மாடியில் உள்ள வீட்டில் 85 லட்சம் ரூபாய் பணத்துடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பிரதான 9 சந்தேக நபர்கள் கடந்த 23ஆம் திகதி கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவலுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீட்டின் மேல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 85 லட்சம் ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த அனைத்து மோசடி சம்பவங்களுக்கும் பிரதானியாக செயற்படுபவர் கனடாவில் வசிப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.