நாட்டில் மேலும் ஏழு பேர் கோவிட் தொற்றினால் உயிரிழப்பு

Report Print Kanmani in சமூகம்
38Shares

நாட்டில் மேலும் 7 கோவிட் 19 மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான கோவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்வடைந்துள்ளன.

குருநாகல், அநுராதபுரம், கம்பஹா, ருக்கஹவில, தெமலகம, கொழும்பு - 5 மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கோவிட் தொற்றால் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.