தோஷத்தை நீக்க பிரம்பால் தாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி

Report Print Kanmani in சமூகம்
268Shares

மீகஹவத்தை - தெல்கொட - கந்துபொட பகுதியில் தோஷத்தை நீக்குவதாக கூறி பிரம்பால் தாக்கப்பட்ட நிலையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியை அவரது தாயும் கடுமையாக தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்த நிலையில், தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சிறுமியை அவரது பெற்றோர் பூசகர் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.இதன்போது சிறுமிக்கு தோஷம் இருப்பதாக கூறி பூசகர் மற்றும் அவரது தாய் ஆகியோர் பிரம்பால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சிறுமி மயக்கமடைந்த நிலையில் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சம்பவம் தொடர்பில் குறித்த பூசகர் காவல்துறையால் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

எனவே பொது மக்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.