தாக்குதல்களுக்கு முந்திய சில நாட்களில் இந்திய தரப்பிலிருந்து வந்த தகவல்கள் முழுமையற்றதாக இருந்தன! - ரணில்

Report Print Ajith Ajith in சமூகம்
102Shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் விசாரணை குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

இன்னும் பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்புக்கு முன்னாள் அரசாங்கம் உண்மையில் பொறுப்பேற்றிருந்தாலும், தகவல்கள் தம்முடன் அவருடன் சரியான நேரத்தில் பகிரப்படவில்லை, இதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.

தாக்குதல்கள் தொடர்பான முன்கூட்டிய தகவல்கள் அரசாங்கத்துக்குத் தாமதமாகியே வந்தமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

அத்துடன் தாக்குதல்களுக்கு முந்திய சில நாட்களில் இந்தியத் தரப்பிலிருந்து வந்த தகவல்கள் முழுமையற்றதாகவே இருந்தன என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்களுக்குப் பின்னர் சுமார் 9 மணி நேரத்திற்குள் அவர்கள் இப்ராஹிம் மற்றும் ஏனையோரை படைத்தரப்பு தெமட்டக்கொடையில் கண்டறிந்து விசாரணைகளை முன்னெடுத்தது.

எனினும் ஏன் முன்கூட்டியே சஹ்ரான் மற்றும் ஏனையோர் பற்றி படைத்தரப்பு தகவல்களை வெளியிடவில்லை என்ற கேள்வியை ரணில் விக்ரமசிங்க எழுப்பியுள்ளார்.