கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 483 ஆக உயர்வடைந்துள்ளது

Report Print Kamel Kamel in சமூகம்
34Shares

நாட்டில் கோவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 483 ஆக உயர்வடைந்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏழு கோவிட் மரணங்கள் தொடர்பில் இன்றைய தினம் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

1. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதான பெண் ஒருவர், கடந்த 1ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா, நீரிழிவு, சிறுநீரக நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.

2. கொழும்பு 5 பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான பெண் ஒருவர், கடந்த 1ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா மற்றும் நீரிழிவு நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.

3. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். உயர் குருதியழுத்தம், கோவிட் நிமோனியா மற்றும் நீரிழிவு நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.

4. பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் கடந்த 1ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா மற்றும் சுவாசப்பை பிரச்சினையினால் உயிரிழந்துள்ளார்.

5. பலிமதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

6. கொழும்பு 6 பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர், அனுராதபுர வைத்தியசாலையில் கடந்த 1ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.

7. கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர், தெல்தெனிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா மற்றும் புற்று நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.