அரசியல்வாதிகள் அதிகாரிகள் மீது செல்வாக்கு செலுத்தி அதன் மூலம் தடுப்பூசி இயக்கத்தை நாசமாக்குவது தொடர்பாக கொழும்பு மாநகர சபைப் பகுதியில் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பாக கருத்துரைத்துள்ள பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர்,கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்று எச்சரித்துள்ளனர்.
மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படும் அரசியல்வாதிகளிடமிருந்து இது போன்ற நடத்தைகளை தாம் எதிர்பார்க்கவில்லை என்று சுகாதார சேவை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியல்வாதிகளால் இந்த வகையான செயல்கள் செய்யப்படும் போது, அது பாதிக்கப்பட்ட தரப்புக்கு பெரும் அநீதியை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.