கம்பஹாவில் பதிவான மரணங்கள் கோவிட் தடுப்பூசி காரணமாக ஏற்பட்டவை அல்ல என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய காரணிகளினால் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார சேவைப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
திவுலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 57 வயதான நபர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்தார்.
இவர் மரணிப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மற்றுமொரு நபரும் இவ்வாறு தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் பின்னர் உயிரிழந்திருந்தார்.கம்பஹா சம்பவம் அடிப்படையாகக் கொண்டு மக்கள் தடுப்பூசி ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு 24 மணித்தியாலங்கள் முதல் 42 மணித்தியாலங்கள் வரையில் சில வேளைகளில் காய்ச்சல் ஏற்படக்கூடும் என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.