கொழும்பில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Report Print Kanmani in சமூகம்
2178Shares

கொழும்பு, டாம் வீதியில் பயணப்பையிலிருந்து தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை சந்தேகநபரான தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரி தனது வீட்டுக்கிணற்றில் போட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து சந்தேகநபரின் வீட்டு கிணற்றில் இன்று தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பொலிஸார் பல முயற்சிகளை மேற்கொண்டும் தலை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி அணிந்து வந்த ஆடை அவரது வீட்டு வளாகத்தில் எரிக்கப்பட்டு இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


You May Like This Video...