ஒரே நேரத்தில் மொத்தமாக விலகிச் சென்ற ஊழியர்கள்! நிர்க்கதியில் தொலைக்காட்சி நிர்வாகம்

Report Print Kalkinn in நிறுவனம்

இலங்கையில் ஒளிபரப்பாகும் பிரபல சிங்கள தொலைக்காட்சி சேவை ஒன்றின் செய்திப் பிரிவில் கடமையாற்றும் ஊழியர்கள் பலர் திடீரென விலகியுள்ளனர்.

இதனால் குறித்த தொலைக்காட்சி சேவை மிகவும் இக்கட்டான நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவு வழங்காமையே ஊழியர்கள் விலகுவதற்கான காரணம் என அறியக் கிடைக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொலைக்காட்சி சேவை, பின்னர் முழு நட்டத்தில் இயங்கியிருந்தது.

எனினும், புதிய அரசாங்கம் ஆட்சி பீடமேறியதை தொடர்ந்து மிக வேகமாக பிரபல்யமடைந்து வந்த இந்த தொலைக்காட்சி சேவை, மீண்டும் பின்நோக்கி செல்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன.

இதன்பிரகாரம், குறித்த தொலைக்காட்சி சேவையிலுள்ள ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இன்று விலகிச் சென்றுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு விலகியவர்களில் பெரும்பாலானோர் செய்திப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என தெரியவருகின்றது.