இரணைமடு வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மாவட்ட செயலக அணி தனதாக்கியது

Report Print Suman Suman in கிரிக்கெட்
27Shares

கிளிநொச்சி மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் மென்பந்து குழுமத்தினால் முதன் முறையாக நடாத்தப்பட்ட இரணைமடு மென்பந்து வெற்றிக்கிண்ணத்தினை கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் தமதாக்கி உள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் மென்பந்து குழுமத்தினால் மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் ஒன்றிணைந்து நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நிகழ்வு நேற்று கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மாலை ஆரம்பமானது.

முதல் வீரர்கள் அறிமுகம் இடம்பெற்று முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வீரர்களை அறிமுகம் செய்து வைத்ததுடன் மென்பந்து இறுதிப்போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

முதலில் களம் இறங்கிய கிளிநொச்சி மாவட்ட நீர்பாசன திணைக்கள அணியினர் பத்து பந்து பரிமாற்றத்தின் இறுதியில் 70 ஓட்டங்களை பெற்றனர்.

தொடர்ந்து களமிறங்கிய கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் பந்து பரிமாற்றத்தின் நிறைவில் 71 ஓட்டங்கள் பெற்று இரணைமடு வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கியுள்ளனர்.

இந்த போட்டி நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், மாகாண நீர்பாசன பெறியியலாளர் பிரேம் குமார் மற்றும் திணைக்களத் தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மென்பந்து ஆர்வலர்கள் எனப்பலர்கலந்து சிறப்பித்தனர்.

Comments