மகிழ்ச்சியான நினைவுகள் இருக்கின்றன! வீரர்களின் திறமைக்கு கடும் சவால்: முரளிதரன்

Report Print Shalini in கிரிக்கெட்

இந்திய அணி வலுவான அணியாக இருந்த போதிலும் 22 ஆண்டுகளாக இலங்கையில் தொடரை வெல்ல முடியவில்லை. இந்திய அணிக்கு ஆட்டத்தை கடினமாக்கிய மகிழ்ச்சியான நினைவுகள் எங்களிடத்தில் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே முத்தையா முரளிதரன் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு பரவாயில்லை, ஆனால் குறைந்த ஓவர் போட்டிகளில் கடுமையாகத் திணறி வருகிறோம்.

இது கடினமான தொடர் எங்கள் வீரர்களின் திறமைக்கு கடும் சவாலாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி வலுவான அணியாக இருந்த போதிலும் 22 ஆண்டுகளாக இலங்கையில் தொடரை வெல்ல முடியவில்லை. இந்திய அணிக்கு ஆட்டத்தை கடினமாக்கிய மகிழ்ச்சியான நினைவுகள் எங்களிடத்தில் இன்னமும் உள்ளன.

சில தொடர்களில் அனைத்துப் போட்டிகளும் வெற்றித் தோல்வியின்றி முடிந்துள்ளன.

இந்தியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெல்வதற்கான எங்களது வாய்ப்பு மிகக் குறைவு. இந்தியாவில் அனைத்து அணிகளுமே திணறியுள்ளன.

கடந்த 13 ஆண்டுகளில் இரண்டு அணிகள் மட்டுமே இந்தியாவில் தொடரை வென்றுள்ளன. இந்திய அணி தற்போது தரவரிசையில் முதலாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.