மைதானத்தில் கடும் வார்த்தைகளால் மோதிய கொண்ட இந்திய - இலங்கை வீரர்கள்

Report Print Vethu Vethu in கிரிக்கெட்

சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

கொல்கத்தா ஏடர் கார்டின் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி நேற்று நிறைவடைந்தது.

இந்தப் போட்டியில் இந்திய மற்றும் இலங்கை வீரர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்ற காணொளி தற்போது வெளியாகி உள்ளது.

நேற்றைய போட்டியில் இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை வீரர்கள் போட்டியை சமப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியினரை விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை தனதாக்குவதில் தீவிரம் அடைந்தனர்.

இதனால் துப்பாட்ட வீரருக்கும் பந்துவீச்சாளருக்கும் இடையில் பலமுறை முறுகல் நிலை ஏற்பட்டது.

போட்டியின் கடைசி மணித்தியாலங்களில் இலங்கை அணி வீரர் நிரோஷன் திக்வெல்ல, துடுப்பெடுத்தாட தயாராகவில்லை என அடுத்ததடுத்து தெரிவிக்க, முதலில் பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி கடுப்பாகினார்.

இதேபோல அந்த ஓவரில் இரண்டு மூன்று முறை திக்வெல்ல இவ்வாறு செய்ய இந்திய அணித்தலைவர் கோஹ்லி கோபமடைந்து நடுவரிடம் முறையிட்டா்.

இதனால், திக்வெல்ல, கோஹ்லி, இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமால் ஆகியோரை அழைத்து நடுவர்கள் பேசினர்.

திக்வெல்லவை நடுவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளதுடன் போட்டி தொடர்ந்தது நடைபெற்றது.

இதனையடுத்து , மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டியை நிறைவு செய்ய நடுவர்கள் தீர்மானித்தனர்.

ஆட்டம் நிறுத்தப்படும் போது இலங்கை அணி 7 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 75 ஓட்டங்களைப் பெற்றிருந்து.

இதன்காரணமாக இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.