இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்தை இந்தியா சுவீகரித்தது

Report Print Aasim in கிரிக்கெட்

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சுதந்திர தின கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கிண்ணத்தை சுவீகரித்தது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் என்று ட்வெண்டி-ட்வெண்டி முத்தரப்பு கிரிக்கெட் போட்டித் தொடராக நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி இந்தியா மற்றும் பங்களாதேஷிடம் தோல்வியுற்று போட்டியில் இருந்து வௌியேறியது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 166 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்திய அணி கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சர் உடன் சேர்த்து 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்று இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

Latest Offers