மீண்டும் வருவேன்! லசித் மாலிங்க திடீர் அறிவிப்பு

Report Print Shalini in கிரிக்கெட்

2017ஆம் ஆண்டு இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டிகளின் பின்னர் எந்தவொரு சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலும் லசித் மாலிங்க விளையாடவில்லை.

இது தொடர்பில் லசித் மாலிங்க காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“2017ஆம் ஆண்டு இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டிகளின் பின்னர் எந்தவொரு போட்டிகளிலும் நான் விளையாடவில்லை.

இதற்கான காரணத்தை நான் கேட்டபோது, “2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இடம்பெறவுள்ளது.

ஆகவே T20 போன்று சிறு போட்டிகளில் விளையாடுவதற்கு புதிய வீரர்களை இணைத்துக்கொண்டு உங்களுக்கு ஓய்வு வழங்குவதற்காகவே போட்டிகளில் உள்வாங்கப்படவில்லை” என அறிவிக்கப்பட்டது.

திறமைகள் இருந்தும் விளையாட சந்தர்ப்பம் கிடைக்காததால் நான் சற்று மனவேதனை அடைந்திருந்தேன்.

இந்த நிலையில் தான் எனக்கு ஐ.பி.எல் தொடரில் மும்பாய் இந்தியன்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. எதிர்வரும் 25ஆம் திகதிகளில் இந்த போட்டிகள் முடிவடையவுள்ளது.

இதையடுத்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. அதில் விளையாடுவதற்கு எனக்கு வாய்ப்பு உள்ளது.

தேசிய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் இலங்கைக்காக விளையாட நான் தயாராக உள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers