கிரிக்கட் இடைக்கால நிர்வாக சபை உருவாக்க ஜனாதிபதி எதிர்ப்பு

Report Print Aasim in கிரிக்கெட்

இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு இடைக்கால நிர்வாக சபையொன்றை உருவாக்கும் முயற்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டிய நிலையில் அதனை ஒத்திவைத்துவிட்டு குறுக்கு வழியில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் நாட்டத்துடன் இடைக்கால நிர்வாக சபையொன்றை உருவாக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் அவ்வாறான இடைக்கால நிர்வாக சபையொன்றை உருவாக்கினால் சர்வதேச கிரிக்கட் கவுன்சில் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையை ஒதுக்கி வைக்கத் தலைப்படும். அத்துடன் நாட்டுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும்.

இந்நிலையில் இடைக்கால கட்டுப்பாட்டுச் சபை ஏற்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது எதிர்ப்பை வௌியிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டும் இடைக்கால நிர்வாக சபையை கலைத்து இலங்கை கிரிக்கட் சபைக்கு ஜனநாயக ரீதியில் நிர்வாக சபையொன்றை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்புலமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers