இலங்கை கிரிக்கட் சபைக்கு இடைக்கால நிர்வாக சபை?

Report Print Aasim in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கட் சபைக்கு இடைக்கால நிர்வாக சபையொன்று தெரிவு செய்யப்படக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னைய நிர்வாக சபையின் பதவிக்காலம் முடிவடைந்திருந்த நிலையில் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தது.

இன்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான இறுதித் தினமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேட்பு மனுக்களைப் பொறுப்பெடுப்பதற்கான அதிகாரிகள் குழு சட்டவிரோதமானது என்ற முறைப்பாடொன்று விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றிருந்தது.

அது தொடர்பாக சட்டமா அதிபரின் கருத்து கேட்கப்பட்ட போது வேட்பு மனுக்களைப் பொறுப்பெடுப்பதற்கான குழுவினர் சட்டரீதியான தகைமையற்றவர்கள் என்று அவர் கருத்து வௌியிட்டதன் காரணமாக தற்போதைக்கு வேட்பு மனுக்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் பொறுப்பெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தற்போதைய நிலையில் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் தலைமையில் இடைக்கால நிர்வாக சபையொன்றை அமைப்பதற்கான சாத்தியமே காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

Latest Offers