பாகிஸ்தான் வீதி கிரிக்கெட் போட்டி தொடர்பில் தீர்ப்பு வழங்கிய ஐ.சீ.சீ

Report Print Kamel Kamel in கிரிக்கெட்

பாகிஸ்தானின் வீதி கிரிக்கெட் போட்டியொன்று தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வமாக தீர்ப்பு வழங்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அண்மையில் பாகிஸ்தானின் கிராமொன்றில் நடைபெற்ற போட்டியொன்றின் போது, துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்த சர்ச்சை குறித்து கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் விளக்கம் கோரியிருந்தார். டுவிட்டர் ஊடாக இந்தக் விளக்கம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“நோ பால் அல்லாத பந்து ஒன்று துடுப்பாட்ட வீரர் ஒருவரின் விக்கட்டில் பட்டு விக்கட் வீழ்ந்தால், (பந்து நேரடியாகவோ அல்லது துடுப்பாட்டவீரரின் மட்டை அல்லது வேறு ஓர் நபரின் மீது பட்டு விக்கட்டில் பட்டால்) அந்த வீரர் ஆட்டமிழந்தவராக அறிவிக்கப்படுவார்” என சர்வதேச கிரிக்கெட் பேரவை விளக்கம் அளித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுவிட்டர் பக்கத்தில் இந்த உத்தியோகபூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டின் 32.1 சட்டத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

“துரதிஸ்டவசமாக இந்த வீரர் ஆட்டமிழந்தவர்” என சர்வதேச கிரிக்கெட் பேரவை டுவிட் செய்துள்ளது.

Latest Offers