இலங்கையில் போட்டி நிர்ணயம்: அல் ஜஸீரா புலனாய்வு தகவல்

Report Print Ajith Ajith in கிரிக்கெட்

இந்திய - இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2016ஆம் ஆண்டில் பணத்திற்காக நிர்ணயிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அல் ஜெசீராவின் புலனாய்வு செய்தியறிக்கையில் இந்த விடயம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றின்மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த போட்டி நிர்ணயிப்பாளர்கள் இந்த வருட இறுதியில் காலியில் இடம்பெறவுள்ள இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியையும் நிர்ணயிக்க இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

காலி மைதானத்தின் ஆடுகள தயாரிப்பாளருக்கு மும்பையின் போட்டி நிர்ணயிப்பாளர் ஒருவர் பணம் வழங்குவது இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது.

எனினும் பணம் வழங்கியவரும் பணம் பெற்றவரும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

Latest Offers