ஆட்ட நிர்ணய சதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை?

Report Print Kamel Kamel in கிரிக்கெட்

கிரிக்கட் ஆட்ட நிர்ணய சதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுவது பாரிய குற்றச் செயலாக வகைப்படுத்தி கடுமையான தண்டனை விதிக்கப்படக் கூடிய வகையில் லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்...

மேலும், ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.தற்பொழுது ஸ்ரீலங்கா கிரிக்கட் ஓர் தனியார் நிறுவனமாகவே கருதப்படுகின்றது.

கிரிக்கட் வீரர்கள் அரசாங்க ஊழியர்களாக கருதப்படுவதில்லை. இதனால் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் சட்டங்கள் நிறுவனத்திற்கோ அல்லது வீரர்களுக்கோ அமுல்படுத்தப்படவில்லை.

கிரிக்கட் மட்டுமன்றி ஏனைய விளையாட்டுக்களிலும் இடம்பெறும் ஆட்ட நிர்ணய சதிகள் மற்றும் சூதாட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊழலுக்கு எதிரான மாநாடொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் திகதி முதல் 8ம் திகதி வரையில் ஒஸ்ட்ரியாவில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் போது ஆட்ட நிர்ணய சதிகளை பாரிய குற்றச் செயல்களாக கருதி சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்துரையாடப்படும் என சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

Latest Offers