இலங்கை கிரிக்கெட்டின் அதிகாரமிக்க அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்

Report Print Murali Murali in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் இடம்பெறும்வரை இலங்கை கிரிக்கெட்டின் அதிகாரமிக்க அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் எச்.டி. கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா வழங்கிவைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தேர்தல் இன்று இடம்பெறவிருந்த நிலையில், அதனை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(31) இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

இலங்கை கிரிக்கெட்டின், தலைவர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான நிஷாந்த ரணதுங்க தாக்கல் செய்திருந்த மனு நேற்றைய தினம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை இலங்கை கிரிக்கட் தேர்தலை நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers